Mahaankal Kooriya Marabu Vazhi kathaikal / மகான்கள் கூறிய மரபுவழிக் கதைகள்
-
₹255
- SKU: SA0017
- ISBN: 9788126020946
- Translator: Mehar.P.U.Ayub
- Author: Manoj Das,
- Language: Tamil
- Pages: 360
- Availability: In Stock
ஆண்டாண்டுக் காலமாய் மகான்களால் கூறப்பட்டுவந்த
மரபுவழிக் கதைகள் கொண்ட இத்தொகுதி மக்கள் மரபுவழிப் பழக்க வழக்கக் கோட்பாட்டுத்
தொகுதிகளின் அங்கமாய் கருதப்படுகிறது. தலைமுறை தலைமுறையாகப் பொதுமக்கள் மனங்களில்
அவை ஏற்படுத்திய தாக்கம், பெருங்காப்பியங்களின்
தாக்கத்துக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். சில சமயங்களில் அவை தலையில் ஆணி
அறைகின்றன; சில வேளைகளில்
அதிர்ச்சியளிக்கின்றன; சில வேளைகளில்
ஒருவரைத் தமக்குள் சிரிக்கவைக்கின்றன. ஆனால் நம் வாழ்வில் செயல்படும் உளவியல்
கூறுகளின் சக்திகளின் சிக்கலையும், குழப்பத்தையும்
இனங்காட்டி, ஒருவரது மனதை
எப்போதுமே மாறாமல் வளமூட்டுகின்றன.
இந்நூலாசிரியர் மனோஜ்தாஸ் இன்று நம் நாட்டின்
முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவருடைய சிறுகதைகள் உலகின் பல
மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. தேசிய நாளிதழ்கள் சிலவற்றில் இவருக்கென
ஒதுக்கப்பட்ட பகுதியில் இவர் எழுதியுள்ள கருத்துரைகள் பிரசித்தமானவையாகும்.
புதுச்சேரியில் அரவிந்தர் அனைத்துலகக் கல்விமையத்தில், ஆசிரியப் பணியாற்றும் இவருக்குச், சில பல்கலைக் கழகங்கள், பணிமூப்பெய்திய பேராசிரியச் சிறப்புப்
பதவியளித்துக் கௌரவித்துள்ளன. படைப்புகள் இயல்பான எழுத்துநடையினின்றும் மாறுபட்டு
இருக்கும். வரு டைய
மெஹர். ப.யூ. அய்யூப் அனைத்திந்திய வானொலி
மற்றும் இந்தியத் தொலைக்காட்சியின் பல நிலையங்களில் பணியாற்றியவர். தமிழில் இவர்
எழுதியுள்ள கதை, கவிதை, கட்டுரை, நாடகம் எனப் பலதிறப்பட்ட படைப்புகள் வானொலியில்
ஒலிபரப்பாகியும், பல்வேறு
பத்திரிகைகள், வார, மாத இதழ்களில் வெளிவந்தும் உள்ளன.
கலீல்ஜிப்ரானின் அரிய படைப்பான 'தி ப்ராஃபட்’
என்ற நூல், ‘பேரறிவாளன்'
என்ற தலைப்பில் இவரால்
மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் இலக்கிய வட்டத்தில் புகழ் பெற்று விளங்குகிறது.

